ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம் | Yamaha workers strike

சென்னை ஒரகடத்தில் செயல்பட்டு வரும் யமஹா இந்தியா நிறுவனத்தில் கடந்த 21-09-2018 முதல் நிரந்தரத் தொழிலாளர்கள் 807 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். யமஹா நிறுவனம் சென்னையில் இந்த ஆலையைத் தொடங்கி கடந்த ஐந்தாண்டுகளாக எவ்வித தொழிலாளர் சட்டங்களையும் பின்பற்றுவதில்லை. தொழிலாளர்களுக்கு உணவு இடைவேளை சுருக்குவது, விடுமுறை அனுமதி மறுப்பு, அனைத்து வேலைகளையும் தொழிலாளிகளை வைத்தே செய்வது என தொடர்ந்து தொழிலாளர் நலச்சட்ட விரோதமாகவே நடந்து வந்தது இந்நிறுவனம். இதனையொட்டி, யமஹா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க முடிவெடுத்து, தொழிற்சங்கத்தைத் தொடங்கினர். உடனடியாக தொழிற்சங்க நிர்வாகிகளை சமூக விரோதிகளை வைத்து மிரட்டியது நிர்வாகம். மேலும் சங்க நிர்வாகிகள் 2 பேரை பணிநீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்தே நிரந்தரத் தொழிலாளர்கள் 807 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தும் யமஹா நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தொழிலாளர் நலத்துறையினரின் தொலைபேசி அழைப்பைக் கூட நிர்வாகம் எடுக்கவில்லை. ஆலை வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசைக் கொண்டு விரட்டியது நிர்வாகம். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிரந்தரமற்ற தொழிலாளர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம். தொழிலாளர் நலத்துறையோ பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி முடிக்காமல் அக்டோபர் 3-ம் தேதி வரை தள்ளி வைத்திருக்கிறது. இன்றளவும் தொடர்கிறது தொழிலாளர்களின் போராட்டம். இப்போராட்டம் குற&
Back to Top